தமிழக விவசாயிகள் கட்சியினர் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம்
தமிழக விவசாயிகள் கட்சியினர் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம்
பெரம்பலூர் உழவர் சந்தையில் பிரச்சாரம் மேற்கொண்டனர், இதில் விவசாயிகளின் விளை பொருட்களான கரும்புக்கு, சின்ன வெங்காயத்திற்கு, மக்காச்சோளத்திற்கு கட்டுபடியான விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென நாடாளுமன்றத்தில் மத்திய அரசை தமிழகத்தை சேர்ந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்த வில்லை எனவும் கட்டுபடியான விலை கிடைக்காததால் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளவதாகவும் எனவே விவசாய விளை பொருட்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்க மத்திய அரசை வலியுறுத்த, தமிழகத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனவும் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் என்.டி.சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தியும் கையில் கரும்புடன் சின்ன வெங்காயத்தை மாலையாக அணிந்து கொண்டு நூதன முறையில் தமிழக விவசாயிகள் கட்சியினர் அதன் மாநில தலைவர் ராமராஜ் தலைமையில் பெரம்பலூர் உழவர் சந்தையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இதில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி வாக்கு சேகரித்தனர். இந்தப் பிரச்சாரத்தின் போது தமிழக விவசாயிகள் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் மணி கோபாலன், ஒன்றிய பொறுப்பாளர்கள் வேப்பந்தட்டை தங்கவேல், ஆலத்தூர் . மருத பிள்ளை, பெரம்பலூர் ராமசாமி, வேப்பூர் ராஜாமணி, உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் விவசாயிகள் பலர் உடன் இருந்தனர்.