தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

பெரம்பலூரில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைப்பெற்றது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அன்னமங்கலம் ஊராட்சி அரசலூர் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் வகையில் புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது. இக்கண்காட்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் மாவட்ட ஆட்சித்தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள், கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய புகைப்படங்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த புகைப்படக் கண்காட்சியினை சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர். பார்வையிட்டவர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது

Tags

Next Story