தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

கண்காட்சியை பார்வையிடும் ஆட்சியர் 

கள்ளக்குறிச்சியில் நடைபெறும் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியில் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டது.

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், தமிழக அரசின் இரண்டரை ஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது. கண்காட்சியை, கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார். டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

கண்காட்சியில், முதல்வர் ஸ்டாலினின் சிறப்பு திட்டங்களான மகளிர் உரிமைத்தொகை திட்டம், முதலமைச்சரின் காலை உணவு, நான் முதல்வன், புதுமை பெண், மகளிருக்கு இலவச பஸ் பயணம், மக்களுடன் முதல்வர், விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, மக்களைத் தேடி மருத்துவம் உட்பட பல்வேறு முக்கிய திட்டங்களின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.

மேலும், கடந்த இரண்டரை ஆண்டுகளில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சிகளில், அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்வுகள், மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட விபரங்களும் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. வரும் 17ம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story