தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய  ஆர்ப்பாட்டம்

மாநிலம் தழுவிய ஆர்பாட்டம்

தர்மபுரியில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது.அதில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நிதியுதவி திட்டப்பணிகளை சமூக நலத்துறை மற்றும் வருவாய்த்துறை இடம் ஒப்படைத்து கிராம சுகாதார செவிலியர்கள் மேற்கொள்ளும் தாய் சேய் நலப்பணி தடுப்பூசி மற்றும் குடும்ப நல பணிகளை செவ்வன நடை பெற உரிய உத்தரவு வழங்க வேண்டும் கிராம சுகாதார செவிலியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளுக்கு முரணாக அரசு ஆணைக்கு எதிராக இதர பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது.

ஆண் சுகாதார ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது போல் பெண் சுகாதார செவிலியர்களுக்கும் பதவி உயர்வு வழங்கி ஆண் பெண் பாலின பாகுபாட்டை கலைய வேண்டும் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வி தலைமை தாங்கினார் உடன் மாவட்ட செயலாளர் தாமரைச்செல்வி மாவட்ட பொருளாளர் நாகராணி துணைத் தலைவர் சத்யா பழனியம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்..

Tags

Next Story