தமிழக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சாதனை புகைப்பட கண்காட்சி துவக்கம்

தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட வள்ளலார் தொடரில் தமிழக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்.

தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட வள்ளலார் திடலில் தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி,நேற்று மாலை 6.30 மணிக்கு தொடங்கி வைத்து, பார்வையிட்டார்கள்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி தெரிவித்ததாவது : தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தற்போது வரை தமிழ்நாடு மக்களின் முன்னேற்றத்திற்காகவும், பொருளாதார மேம்பாட்டிற்காகவும், வாழ்க்கை தர உயர்விற்கும் எண்ணற்ற நலத்திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள், சாதனைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்றைய தினம் தருமபுரி நகராட்சிக்குட்பட்ட வள்ளலார் திடலில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இப்புகைப்படக் கண்காட்சி தருமபுரி நகராட்சிக்குட்பட்ட வள்ளலார் திடலில் 13.03.2024முதல் ஒரு வாரகாலத்திற்கு நடைபெற உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 07.05.2021 அன்று ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் தற்போது வரை கடந்த இரண்டரை ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள். நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இப்புகைப்படக் கண்காட்சியில் மேலும், பள்ளிக்கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை,வேளாண்மைத் துறை. தோட்டக்கலைத் துறை, பட்டுவளர்ச்சித்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் மற்றும் மகளிர் திட்டம் சார்பில் கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி உட்பட துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story