நாகை அவுரித்திடலில் தமிழக அரசின் சாதனை விளக்க நிறைவு விழா

நாகை அவுரித்திடலில் தமிழக அரசின் சாதனை விளக்க நிறைவு விழா

நிறைவு விழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி

நாகை அவுரித்திடலில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி நிறைவு விழா நடைபெற்றது.

நாகை புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள அவுரித்திடலில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த சிறப்பு புகைப்படக் கண்காட்சி அரங்கின் நிறைவு நாளில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத்தலைவர் .என்.கௌதமன் தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் உ.மதிவாணன் ஆகியோர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்கள்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த சிறப்பு புகைப்படக் கண்காட்சி அரங்கு 10.03.2024 அன்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாணவ-மாணவியர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு துறை சார்பில் அரசு துறைகளை ஒருங்கிணைத்து அரசின் சாதனைகள் மற்றும் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்து வைக்கப்பட்டுள்ள துறை சார்ந்த கண்காட்சி அரங்குகளும் திறக்கப்பட்டது.

இதன் மூலம் பொதுமக்கள் அனைவரும் பார்வையிட்டு தமிழ்நாடு அரசின் திட்டங்களை தெளிவாக தெரிந்து கொள்ள ஏதுவாக இந்த கண்காட்சியானது அமைக்கப்பட்டது. தினமும் பள்ளி கல்லுரி மாணவ/மாணவியர்களிடையே பல்வேறு கலை நிகழ்ச்சிகளை ஏராளமான பொது மக்கள் பார்வையிட்டனர்.

அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத்தலைவர் அவர்கள், தமிழ்நாடு தாட்கோ கழகத்தலைவர் அவர்கள் ஆகியோர் கலை நிகழ்ச்சிகளை பார்விையிட்டு, கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்கள்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி ரா.பேபி, இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் பி.ராணி மற்றும் அரசு அலுவலர்கள், ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story