தமிழ்நாடு அரசு உறுதிமொழி குழுவினர் ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு உறுதிமொழி குழுவினர் ஆய்வு மேற்கொண்டதை தொடர்ந்து வேல் முருகன் நிருபர்களை சந்தித்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமிழ்நாடு அரசு உறுதிமொழி குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவை உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் கூறுகையில், நம்முடைய மாவட்டத்தில் இருக்கும் நீர்ப்பாசத்துறை அமைச்சர் மற்ற மாவட்டங்களில் இருக்கும் பிரச்சனைகளை விரல் நுனியில் வைத்து ஆயிரக்கணக்கான கோடிகளை ஒதுக்கி தென்பெண்ணை பாலாறு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் காவிரி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை ஒதுக்கி தீர்வு கொண்டு வருகிறார்.
நம்முடைய மாவட்டத்திற்கு உள்ள நீர் பாசன வசதி பிரச்சனைகளை சந்திக்க 1200 கோடி தேவைப்படுகிறது அதையும் அவர் கருத்தில்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் பேசுவது மட்டுமல்லாமல் ராணிப்பேட்டை வேலூர் திருப்பத்தூர் மாவட்டத்தில் வந்திருக்கின்ற புதிய மாவட்ட ஆட்சித்தலைவர்கள் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் பதிவிட்டு சென்றார். உடன் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான தேவராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.