டிடிடிஏ பள்ளியில் தமிழக அரசின் மிதிவண்டிகள் வழங்கும் விழா

டிடிடிஏ பள்ளியில் தமிழக அரசின் மிதிவண்டிகள் வழங்கும் விழா
X

இலவச மிதிவண்டி வழங்கல்

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை டிடிடிஏ பி.எஸ்.பெரியநாயகம் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை டிடிடிஏ பி.எஸ்.பெரியநாயகம் மேல்நிலைப் பள்ளியில் 2023-2024–ம் கல்வி ஆண்டில் 11–ம் வகுப்பு பயிலும் 97 மாணவர்கள், 113 மாணவிகளும் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் பள்ளி ஆட்சிமன்றக் குழுத்தலைவரும், ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் மேலாளருமாகிய ஜேஸ்பர் அற்புதராஜ் தலைமை வகித்தார்.

டிடிடிஏ பி.எஸ்.பெரியநாயகம் மேல்நிலைப் பள்ளியின் தாளாளரும், தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் லே செயலாளருமான னு.நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், உயர்நிலை மேல்நிலைப் பள்ளி மற்றும் சிறப்புப் பள்ளிகளின் மேலாளரும், தமிழ்நாடு கிறிஸ்தவ தோவாலய பணியாளர்கள் நலவாரியத்தின் உறுப்பினருமாகிய பிரேம்குமார் ராஜாசிங் முன்னிலை வகித்து மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினர். இவ்விழாவில் தலைமையாசிரியை கமலியா கெத்சி, ஆசிரியப் பெருமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story