தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம்

செயற்குழு கூட்டம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த‌ வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் தங்கவேலு தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பேட்ரிக் பெயிண்ட்மெண்ட் முன்னிலை வகித்தார். திருச்சி மாவட்ட செயலாளர் ராஜ்மோகன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு மாநில முன்னுரிமை மற்றும் 19 ஆண்டுகால கோரிக்கையான பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் நடுநிலை தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கும் வகையில் இறுதியில் மாற்றம் செய்து அரசாணை எண் 243 வெளியிட உத்தரவிட்ட தமிழக முதலமைச்சர் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசுக்கு இணையான ஈட்டிய விடுப்பு ஆசிரியர்கள் பெரும் உயர் கல்விக்கு பழைய முறைப்படி ஊக்க ஊதியம், அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பணி கொடையினை தமிழக அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் மாநில பொருளாளர் நாராயணன் நன்றி கூறினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாநில செயற்குழு உறுப்பினர் ரமேஷ் குமார் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

Tags

Next Story