தமிழ்நாடு கிராம வங்கியை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்
கிராம வங்கியை திறந்து வைத்த ஆட்சியர்
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு கிராம வங்கியின் 657 வது கிளையினை மாவட்ட ஆட்சி தலைவர் துரை, ரவிச்சந்திரன் இன்று ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் அமைந்துள்ள புதிய கட்டிடத்தில் திறந்து வைத்தார்.
இவ்விழாவில் 116 பயனாளிகளுக்கு சுய உதவி குழு கடன். தொழிற்கடன் பிரதான் மந்திரி சாலையோர வியாபாரிகள் கடன் (ஸ்வாநிதி), வீட்டுக்கடன் ஆகியவை ரூ.113.00.000/- (ரூபாய் ஒரு கோடியே பதிமூன்று லட்சம்) வழங்கப்பட்டது.
வங்கியின் பொது மேலாளர் திரு.வாசுதேவன் அவர்கள் தலைமை உரையாற்றினார்.
அஜித் செல்வன் கிளை மேலாளர் நன்றியுரை ஆற்றினார். திறப்பு விழா நிகழ்ச்சியில் அரசு மற்றும் வங்கி அதிகாரிகள், உதவிமக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags
Next Story