தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் குறைபாடுகள் உள்ளது: இபிஎஸ்

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் குறைபாடுகள் உள்ளது: இபிஎஸ்

செய்தியாளரை சந்தித்த எடப்பாடி

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் குறைபாடுகள் உள்ளது என இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் வெப்பச்சலனம் அதிகமாக உள்ள காரணத்தால் மக்கள் ஊர்களில் இருந்து நகரப்பகுதிக்கு வந்து செல்வதால் மக்களின் தண்ணீர் தாகத்தைப் தீர்க்கும் வகையில் தமிழக முழுவதும் உள்ள மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஊராட்சி என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஏற்படும் பேரிடர் காலங்களில்,

மத்திய அரசிடம் நிவாரண நிதி கேட்கும் பொழுது எந்த அரசும் கேட்ட நிதியை கொடுத்தது கிடையாது அதேபோன்று மத்தியில் திமுக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பொழுது நீதியை பெற்றது கிடையாது. நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அதிகமான இடங்களில் வெற்றி பெறும் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் வெயிலிலும் பாராமல் மக்கள் இந்த தேர்தலில் தவறாமல் ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள பொதுப்பணி துறை சார்பாக 14 ஆயிரம் ஏரிகள் உள்ளன இதில் 6000 ஏரிகள் அதிமுக ஆட்சிக்காலத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டதால் மழைக்காலங்களில் வருகின்ற மழைநீர் ஏரிகளில் ஆங்காங்கே தேங்கி நின்று கோடை காலங்களில் மக்களின் பயன்பாட்டிற்கு கிடைத்திருக்கும் ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு,

பின்பு அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிமராமத்து திட்டத்தை தொடராமல் மீதமுள்ள 8000 ஏரிகள் தூர்வாரப்படாமல் இருப்பதால் கோடை காலங்களில் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதேபோன்று தமிழகத்தில் அனைத்து துறைகளும் குறைபாடுகளாகவே தான் உள்ளது எனவும் தமிழகம் போதை பொருள் மாநிலமாக மாறி வருகிறது குற்றம் சாட்டி பேசினார்.

Tags

Next Story