தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சிறப்பு கோட்ட பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின், சிறப்பு கோட்ட பொதுக்குழு கூட்டம், பல்வேறு தீர்மானத்துடன் பெரம்பலூரில் நடைபெற்றது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் சார்பில் சிறப்பு கோட்ட பொதுக்குழு கூட்டம் பெரம்பலூர், வெங்கடேசபுரம் ரோவர் வளைவு பகுதியில் உள்ள, லட்சுமி மருத்துவமனை கூட்ட அரங்கில் நடைபெற்றது கோட்டத் தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, கோட்ட துணைத் தலைவர்கள் கருணாநிதி, மதியழகன், கோட்டை இணைச் செயலாளர்கள், காட்டு ராஜா, ராஜ, ஆகியோர் முன்னிலை வகித்த நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் மகேந்திரன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார், நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் குமரி அனந்தன், தமிழ்நாடு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில், தமிழக அரசின் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவாளும் மற்றும் நெடுஞ்சாலைத்துறை சீரமைப்பு நடவடிக்கையாலும் ஏற்பட உள்ள பெரும் பாதிப்பிலிருந்து ஒட்டுமொத்த சாலை பணியாளர்களையும், மக்களையும் பாதுகாத்திடவும் சாலை பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கையை வென்றெடுக்கவும் ஸ்தாபன பலத்தை வலுவாக கட்டமைத் தடவும், மாநில செயற்குழு முடிவினை அமுல்படுத்திடவும் இந்த சிறப்பு கோட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதாகவும், இதில் 41 மாத பணி நீக்க காலத்தை பனிக்காலமாக அறிவித்திட வேண்டும், சாலை பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வி திறன்பெறா ஊழியர்களுக்கான ஊதியம் ரூ5200, ரூ 20,000, தரஊதியம் ௹ 1900 நிர்ணயம் செய்து ஏழாவது ஊதிய மாற்ற பலன்கள் வழங்க வேண்டும், பணி நீக்க காலத்தில் இறந்து போன சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அரசுக்கு முன்வைத்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளர் அம்சராஜ் கோட்ட பொறியாளர் சுப்பிரமணியன் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட அமைப்பாளர் சின்னசாமி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் மேரி, உள்ளிட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.