திருச்செங்கோட்டில் இன்று தமிழ்நாடு குலாலர் மகாஜன சங்க நூற்றாண்டு விழா

திருச்செங்கோட்டில் இன்று தமிழ்நாடு குலாலர் மகாஜன சங்க நூற்றாண்டு விழா

திருச்செங்கோட்டில் இன்று தமிழ்நாடு குலாலர் மகாஜன சங்க நூற்றாண்டு விழா

திருச்செங்கோட்டில் இன்று தமிழ்நாடு குலாலர் மகாஜன சங்க நூற்றாண்டு விழா

தமிழ்நாடு குலாலர் மகாஜன நூற்றாண்டு விழா இன்று 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருச்செங்கோடு நாமக்கல் மெயின் ரோட்டில் உள்ள பி.வி வேலுச்சாமி முதலியார் சின்னம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது நூற்றாண்டு விழாவில் கௌரவத் தலைவர் டி.எஸ்.ஏ.வெங்கடேசன் சங்க கொடியேற்றி ஊர்வலத்தை துவக்கி வைக்கிறார். மகளிர் அணியினர் குத்து விளக்கு ஏற்றி வைக்கின்றனர். சங்க செயலாளர் ஏ.எஸ்.குணசேகரன் வரவேற்புரை ஆற்றுகிறார்.சங்கத் தலைவர் எஸ்.ராஜசேகரன் தலைமை உரையாற்றுகிறார்

துணைத் தலைவர்கள் என்.ரங்கசாமி ஜி சேகர் டி.எஸ்.ஏ.வி.சீனிவாசன் துணைச் செயலாளர்கள் கயிலை மணி எம்.எஸ்.தேவராஜன், ஆர். சோமசுந்தரம், டி.எஸ்.தங்கராசு, முன்னாள் செயலாளர் ஜி.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் தணிக்கையாளர் பி.மோகனசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

விழாவில் நகைச்சுவை பேச்சாளர் புலவர் மா ராமலிங்கம் சிறப்புரையாற்றுகிறார். தொடர்ந்து விழாவில் சங்க மூத்த உறுப்பினர்கள் 75 வயது பூர்த்தி செய்தவர்களுக்கு விருது வழங்குதல் மண்பாண்ட கலைஞர்களுக்கு கவுரவப்படுத்துதல் கல்விப் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு கல்வி பரிசளிப்பு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. தொடர்ந்து குழந்தைகளின் நாட்டிய நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற உள்ளது. இறுதியாக பொருளாளர் கே.சிங்காரவேல் நன்றி கூறுகிறார்

Tags

Next Story