தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு ஆய்வு
ஆய்வு பணி
அரியலூரில் ஆய்வு பணியில் எம்.எல்.ஏ.க்கள் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழுவினர் இன்று அரியலூர் மாவட்டத்தில் செயல்படுத்தபட்டுள்ள வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய வந்துள்ளனர். இந்நிலையில் புதிதாக கட்டி திறக்கபட்டுள்ள அரியலூர் மாவட்ட போக்குவரத்து காவல் நிலையத்தை ஆய்வு செய்தனர்.
மேலும் மது குற்ற வழக்குகளில் கைப்பற்றபட்ட இரு வாகனங்கள் நிறுத்தி வைக்கபட்டுள்ளதை பார்வையிட்டனர். இதில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், பட்டுகோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சேலம் சட்டமன்ற உறுப்பினர் அருள் உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா,
அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags
Next Story