தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம்
விருதுநகரில் நடந்த தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் வரும் பிப். 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தீர்மானம் நிறைவேற்றபட்டது.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று விருதுநகர் எம் ஆர் அப்பன் இல்லத்தில் மாநிலத் தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது வேலை அறிக்கையினை மாநில பொதுச் செயலாளர் நூர்ஜகான் சமர்பித்தார் நிதிநிலை அறிக்கையினை மாநில பொருளாளர் சுக்கு காலை சமர்ப்பித்தார் மேலும் இம்மாநில செயற்குழு கூட்டத்தில் , சத்துணவு ஊழியர்களுக்கும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறுகின்ற வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்கக்கூடிய மாதாந்திர ஓய்வூதியம் ரூ 6750 _/_,ஐ வழங்க கோரியும் ,அரசுத்துறை காலிப்பணியிடங்களில் பணி நிரப்பு செய்ய வேண்டும் ,காலை உணவு திட்டத்தினை சத்துணவு ஊழியர்கள் மூலமாக அமுல்படுத்தக்கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் , பல்வேறு போராட்டங்கள் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வரும் நிலையில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி முதல் பிப்ரவரி 23ஆம் தேதி வரை தொடர்ச்சியாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தி,பின்பு ,கோட்டை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் இதில் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த அனைத்து சத்துணவு ஊழியர்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Next Story