தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே .எம் ஷரீஃப் பேட்டி!

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே .எம் ஷரீஃப் பேட்டி!

கே .எம் ஷரீஃப் பேட்டி!

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாநில தலைவர் கே.எம் ஷரீஃப் புதுக்கோட்டையில் பேட்டியளித்துள்ளார்.
பாஜக எதிர்ப்பு நிலை எடுத்ததால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேரில் சென்று பாராட்டினேன் அந்த நிலை தொடர்ந்தால் வரும் தேர்தலிலும் என்னை போல் பல்வேறு சிறுபான்மை கட்சியினரும் சிறுபான்மையினரும் அதிமுக கட்சிக்கு ஆதரவளிப்போம் என தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாநில தலைவர் கே.எம் ஷரீஃப் புதுக்கோட்டையில் பேட்டியளித்துள்ளார். புதுக்கோட்டை கீழே ஏழாம் வீதியில் உள்ள தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநிலத் தலைவர் கே. எம். ஷெரிஃப் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் தெரிவிக்கையில் தொடர்ந்து தமிழக அரசு இது தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்ற கவர்னரை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். பேரறிஞர் அண்ணா சொன்னது போல கவர்னர் பதவி என்பது நாட்டிற்கு வீட்டிற்கு தேவையில்லாத ஆட்டுக்கு தேவையில்லாத தாடி போல அந்த தாடி தமிழ்நாட்டுக்கு தேவையில்லை என அறிஞர் அண்ணா 40 ஆண்டுகளுக்கு முன்பாகவே கூறிவிட்டார் ஆகவே மத்திய அரசு உடனடியாக தமிழக கவர்னர் திரும்பப் பெற வேண்டும். உச்சநீதிமன்றம் ஒரு மிகச்சிறந்த தீர்ப்பை நாட்டு மக்களுக்கு கொடுத்து இருக்கிறது தேர்தல் பத்திரம் என்ற பெயரில் தனக்கு வேண்டிய முதலாளிகளிடம் இருந்து நன்கொடைகளை வாங்குகிற வேலையை கடந்த ஓராண்டாக மத்திய அரசாங்கம் பாரதிய ஜனதா கட்சி செய்து வந்தது அது தவறு அந்த தேர்தல் பத்திரங்களை திரும்ப பெற வேண்டும் உச்ச நீதிமன்ற பென்ச் சிறப்பான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது அதனை நாங்கள் வரவேற்கிறோம் பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய தோல்வி என கருதுகிறோம் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் கொடுக்கும் தீர்ப்புகளை பொதுவாக பெரிய அரசியல் கட்சிகள் மதிப்பதில்லை மாநிலங்கள் மதிக்காமல் இருந்தால் அதில் கூட ஒரு நியாயம் உள்ளது கர்நாடகா பிரச்சனையிலே கர்நாடகம் இச்செயலை செய்வதில் ஒரு நியாயம் இருக்கிறது ஆனால் உயர் நீதிமன்ற தீர்ப்புகளை புதுக்கோட்டை நகராட்சி ஒருபோதும் மதிப்பதில்லை புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக ஆக்குகிற ஒரு திட்டம் என்பது மிக மோசமான திட்டம் புதுக்கோட்டை நகராட்சியை பேரூராட்சியாக ஆக்க வேண்டும் ஏனென்றால் நகராட்சிக்கு இருக்கின்ற குறைந்தபட்ச எந்த வேலை திட்டத்தையும் இதுவரை செய்யவில்லை இதனை மாநகராட்சியாக மாற்றினால் வரி உயரம் தேவையில்லாத வரி சுமை இங்குள்ள மக்களிடம் வைக்கப்படும். ஆகவே நகராட்சியை வாய்ப்பு இருந்தால் பேரூராட்சியாக ஆக்க வேண்டும் இதனை ஒருபோதும் மாநகராட்சியாக மாற்றக்கூடாது புதுக்கோட்டை நகராட்சிக்கு உள்ள கடன் இன்னும் நூறு வருடம் ஆகும் என தெரிவித்தார். அதேபோல் புதுக்கோட்டையில் உள்ள இரண்டு முக்கியமான நீர் நிலைகளில் குறிப்பாக கும்பந்தான் குளம், பழனியாண்டி ஊரணி ஆகிய இரண்டு கூல்களில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளன இதற்கு புதுக்கோட்டை நகராட்சி சேர்ந்தவர்கள் துணை போகிறார்கள் மேலும் பிளாட் போட்டு நகராட்சி அலுவலர்களால் விற்பனையும் செய்யப்பட்டுள்ளது. இதற்காக உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று போட்டு உள்ளேன் அந்த வழக்கின் தீர்ப்பில் ஆறு வாரங்களுக்குள் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவு போட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வேல் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலைத் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் இதுவரை 13 மாதங்கள் ஆகிவிட்டன இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை கொலை வழக்கிலேயே 90 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது ஆனால் இது மக்கள் பிரச்சனையில் இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை இதில் பல்வேறு சந்தேகங்களுக்கு இடம் கொடுப்பதாக தெரிய வருகிறது இன்னும் கொஞ்ச நாளில் தேர்தல் வந்துவிடும் தேர்தல் வந்துவிட்டதால் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என சொல்லாமல் உடனடியாக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் மேலும் தற்பொழுது பாதிக்கப்பட்ட மக்களிடம் சென்று உங்களுக்கு அதை செய்கிறோம் இதை செய்கிறோம் உங்கள் ஊருக்கு நீங்கள் கேட்க வசதிகளை செய்து தருகிறோம் நாங்கள் தான் செய்தோம் என்ன குற்றத்தை ஒப்புக் கொள்ளுங்கள் என அன்பாக மிரட்டி வருவதாகவும் இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் ஆகவே இயங்கவேல் பிரச்சனையில் உடனடியாக நடவடிக்கையை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். சிறைவாசிகள் விடுதலையை பொருத்தவரை என்னுடைய கோரிக்கையில் 49 பேரை விடுதலை செய்ய வேண்டும் என கடுமையாக போராடினோம் எங்களுடைய போராட்டத்திற்கு பின் மாநில அரசாங்கம் கவர்னருக்கு பரிந்துரை செய்தது அந்த 49 பேரில் கிட்டத்தட்ட 20 பேருக்கு மட்டும் தான் கவர்னர் கையெழுத்திட்டு இருக்கிறார் அதில் 10 பேர் இஸ்லாமிய சிறைவாசிகள், இஸ்லாமிய சிறைவாசிகளில் கிட்டத்தட்ட 26 பேர் சிறைச்சாலையில் இருக்கின்றனர் அவர்கள் விடுதலையை உடனடியாக செய்த வேண்டும் என தெரிவித்தார் கவர்னரை காரணம் சொல்லிக் கொண்டிருக்காமல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். அப்படி கவர்னர் 49 பேருக்கு கையெழுத்து போடவில்லை என்றால் உச்ச நீதிமன்ற வழிகாட்டியின் படி மாநில அரசாங்கமே 161 விதியின்படி அவர்களை விடுதலை செய்யலாம். வேங்கை வயல் பிரச்சனையில் காலதாமதம் ஏற்படுத்துவதற்கு அரசியல் அதித்தையுமே காரணம் திமுக ஓட்டை பற்றி கவலைப்படுகிறது நாங்கள் நாட்டை பற்றி கவலை படுகிறோம் . புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரை 25 சதவீதம் தலித் மக்கள் உள்ளனர் இந்த 25 சதவீத வாக்குகளை பற்றி கவலைப்படாமல் சில குறிப்பிட்ட சமூக வாக்குகளை மட்டுமே இந்த திமுக அரசாங்கம் கவலைப்படுகிறது இதனை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் கண்டிக்கின்றோம். தமிழகத்திலேயே தலித்துகள் மீது தாக்குதல் நடத்துவது புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகம். வடுகாடு வன்கொடுமை சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்காமல் புதுக்கோட்டை காவல் துறை இருந்து வருகிறது ஆகவே புதுக்கோட்டை மாவட்டத்தை வன்கொடுமை அதிகம் பாதித்த மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பாரதிய ஜனதா கட்சி என்பது இந்த தேசத்திற்கு தேவையில்லாத கட்சி அந்த பாரதிய ஜனதா கட்சியில் இருந்து ஒரு செங்கல் கூட தனியாக வந்தால் அதனை தூக்கி சுமக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது என்றும் அதிமுக பிஜேபியை விட்டு வெளியே வந்ததை நாங்கள் வரவேற்கிறோம், பாராட்டுகிறோம், போற்றுகிறோம், பிஜேபி எதிர்ப்பு நிலைப்பாட்டில் அதிமுக தொடர்ச்சியாக இருக்குமே ஆனால் நிச்சயமாக சிறுபான்மை மக்களின் வாக்குகள் அதிமுகவிற்கு சேரும் எண்களை போன்றவர்கள் கூட ஆதரிக்கின்ற நிலைமை ஏற்படும், திமுக தேர்தல் அறிக்கையில் கூறியவை இதுவரை எதையுமே நிறைவேற்றவில்லை குறிப்பாக ஆயிரம் ரூபாய் பிரச்சனை ஆங்காங்கே உள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்த கே எம் ஷெரீப் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்திருக்க வேண்டும் குறிப்பாக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள கல்விக் கடலை ரத்தீவு செய்யவில்லை இதுவரை தமிழகத்தில் ஒருவருக்கு கூட இந்த கடனை ரத்து செய்யவில்லை இது மிகவும் கண்டிக்கத்தக்கது மேலும் 80000 கல்விக்கடன் வாங்கியவர்களுக்கு தற்பொழுது 15 லட்ச ரூபாய் கட்ட வேண்டும் என நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டு வருகிறது ரிலையன்ஸ் போன்ற கம்பெனிகளிடம் அந்த பணத்தை வசூல் செய்யும் உரிமையை கொடுத்துள்ளனர் ஆகவே உடனடியாக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டவாறு திமுக அரசு உடனடியாக கல்விக்கணினி ரத்து செய்ய வேண்டுமென கூறினார். பிஜேபியில் இருந்து அதிமுக வெளியே வந்தவுடன் முதல் ஆளாக நான் நேரடி சென்று பொதுச் செயலாளர் பார்த்தோம் அவருடைய நிலைப்பாட்டிற்கு என்னுடைய ஆதரவை தெரிவித்தேன் என கூறினார். மேலும் அதிமுக மாநாட்டில் சிறைவாசிகளுக்காக போட்ட தீர்மானத்திற்கு நன்றியையும் தெரிவித்தும் எனக் கூறினார். தொடர்ச்சியாக இந்த நிலைப்பாட்டை அதிமுக தொடரும் ஆனால் எங்களைப் போன்ற ஆதரவு தேர்தலில் உண்டு என தெரிவித்தார்.

Tags

Next Story