ராசிபுரத்தில் தமிழக மக்கள் தன்னுரிமை கட்சியினர் வாக்கு சேகரிப்பு
ராசிபுரத்தில் தமிழக மக்கள் தன்னுரிமை கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.
நாமக்கல் மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் தன்னுரிமைக் கட்சியின் சார்பில் போட்டியிடும் மருத்துவர் பா.எழில் செல்வனை ஆதரித்து அக்கட்சியினர் ராசிபுரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். தமிழக மக்கள் தன்னுரிமை கட்சியின் சார்பில் மருத்துவர் பா.எழில்செல்வன் வைரம் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இதனை தொடர்ந்து கட்சியின் நிறுவனத் தலைவர் நல்வினை செல்வன் தலைமையில் அக்கட்சியை சேர்ந்தவர்கள் வைரம் சின்னத்திற்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ராசிபுரம் ஜாகிர் உசேன் சாலையில் உள்ள பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற புனித ரமலான் மாத சிறப்பு தொழுகையில் கலந்து கொண்ட இஸ்லாமியர்களிடம் அக்கட்சியின் நிறுவனர் நல்வினை செல்வன், மாவட்ட செயலாளர் முருகேசன் உள்ளிட்டோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதே போல் உழவர் சந்தை, புதிய பேருந்து நிலையம், ஆகியப் பகுதிகளிலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் வெண்ணந்தூர் ஒன்றிய தலைவர் ராமசாமி, ஒன்றிய செயலாளர் மாதையன், ராசிபுரம் நகர செயலாளர் ஆனந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.