தமிழ்நாடு முன்னோடி மாநிலம்: கே.ஆர்.என். ராஜேஸ்குமார் எம்.பி

தமிழ்நாடு முன்னோடி மாநிலம்: கே.ஆர்.என். ராஜேஸ்குமார் எம்.பி

நலத்திட்ட உதவிகள் வழங்கல் 

பெண்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலம் என கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலம் - கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி பேச்சு நாமக்கல்- பரமத்தி சாலையில் உள்ள ஐஸ்வர்யா மஹாலில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மகளிர் திட்ட இயக்குனர் கு.செல்வராஜ் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட ஆட்சியர் ச.உமா தலைமை தாங்கினார். சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்மார் 939 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 11,592 மகளிருக்கு (உறுப்பினர்கள்) ரூ.68.37 கோடி வங்கி கடனுதவிகளை வழங்கி, பேசுகையில், பெண் கல்வி உயர்ந்தால் அவர்களது வாழ்வாதாரமும் உயருவதோடு, சமுதாயமும் நாடும் உயரும். பெண்கள் பொருளாதாரத்தில் மேம்பட வேண்டும் என்ற நோக்கில் முத்தமிழறிஞர் கலைஞர் 1989 ஆம் ஆண்டு மகளிர் சுய உதவி குழு துவக்கினார். நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளன. ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சொத்தில் உரிமை என சட்டத்தை கொண்டு வந்தவர் முத்தமிறிஞர் கலைஞர்.

அது போல் தற்போது ஆட்சி நடத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகளிர் சுய உதவி குழுக்கள் கூட்டுறவு சங்கத்தில் பெற்ற கடன் தள்ளுபடி, 5 பவுன் வரை உள்ள நகை கடன் தள்ளுபடி, பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார் இதில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டத்தினை இந்திய நாடே போற்றி வருகிறது.

இத்திட்டம் எவ்வாறு தமிழ்நாட்டில் மட்டும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என வெளி மாநிலத்தினர் தமிழ்நாட்டிற்கு வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர். எப்பொழுதெல்லாம் திமுக ஆட்சி வருகிறது அப்பொழுதெல்லாம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு புத்துணர்ச்சி கிடைப்பதுடன் மறுவாழ்வும் கிடைக்கிறது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் திட்டத்தை சென்னையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்ததோடு,

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன்கள் வழங்கவும் மானியம் வழங்கவும் வங்கிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். இந்த திமுக ஆட்சி பெண்களுக்கான ஆட்சி. ஆகையால் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு நல்லாதரவு தர வேண்டும் என கேட்டுக் கொண்டார். முன்னதாக இராஜேஸ்குமார் எம்.பி மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் கணக்கெடுப்பு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து,

பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 2 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகர்மன்ற தலைவர் து.கலாநிதி, துணைத்தலைவர் செ.பூபதி, திமுக நகர செயலாளா்கள் ராணா ஆனந்த், சிவக்குமார்,

ஒன்றிய செயலாளா் அசோக்குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக உதவி திட்ட அலுவலர் ஆ. காளிதாஸ் நன்றி கூறினார்.

Tags

Next Story