சத்தியமங்கலத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்த போராட்டம்

சத்தியமங்கலத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்த போராட்டம்

வேலைநிறுத்த போராட்டம் 

சத்தியமங்கலத்தில்,தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலத்தில்,தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி, தொடர் வேலைநிறுத்த போராட்டம். தமிழகம் முழுவதும்,தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடை பெற்று வருகிறது.அதன் ஒரு பகுதி யாக,சத்தியமங்கலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், சத்தியமங்கலம் வருவாய் வட்டாட்சியர் மாரிமுத்து தலை மையில், வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர், கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.துணை வட்டா ட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக,பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்கப் பாதுகா ப்பு அரசாணையினை உடன் வெளியிட வேண்டும்.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் மூன்று ஆண்டுகளு க்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடன் நிரப்பிட வேண்டும்.அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்திட வேண் டும்.அனைத்து மாவட்டங்களி லும் பேரிடர் மேலாண்மைப் பணிக்கென சிறப்பு பணியிட ங்கள் மற்றும் பேரிடர் மேலா ண்மைப்பிரிவில் 31.03.2023 முதல் கலைக்கப்பட்ட 97 பணி யிடங்களை மீண்டும் வழங்கிட வேண்டும். 2024 பாராளுமன்ற தேர்தல் பணிகளைத் தொய் வின்றி மேற்கொள்ள முழுமை யான நிதி ஒதுக்கீட்டினை உடன் வழங்கிட வேண்டும். உங்கள் ஊரில் உங்களைத் தேடி. மக்களுடன் முதல்வர் மற்றும் மக்களின் முகவரி போன்ற அரசின் திட்டப் பணிகளில் அதீத பணி நெருக்கடி அளிக்கப்படுவதைத் தவிர்த்து திட்டப் பணி களை, செம்மையாக மேற்க்கொள்ள உரிய கால அவகாசம் மற்றும் நிதி ஒதுக்கீடு ஆகிய வற்றை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்தியமங்கலம் வட்டாச்சியர் அலுவலகத்தில் வருவாய்துறையின் பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் வருவாய்துறை அலுவலர்கள், இன்று காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். வேலை நிறுத்தப்போராட்டத்தில், சமூக நலத்திட்ட வட்டாச்சியர் உமாமகேஸ்வரன், வட்ட வழங்கல் அலுவலர் ஜெகநாதன், வருவாய் ஆய்வாளர் ஜீவன் உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர். வருவாய் துறை அலுவலர்கள் வேலைநிறுத்தம் காரணமாக, சத்தி வட்டாச்சியர் அலுவலகம் வெறிச்சோடிய நிலையில், மனு அளிக்கவும், சான்றிதழ் விபரம் அறிய வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Tags

Next Story