தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநாடு

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநாடு

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநாடு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் பங்கேற்றனர்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் திருக்கோவிலூர் ஒன்றிய மாநாடு, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் கருணாகரன் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைச் செயலாளர் அய்யனார் முன்னிலை வகித்தார். ஒன்றிய தலைவர் ஜானகிராமன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் மணிகண்டன் வேலை அறிக்கை வாசித்தார். 'சமூக மாற்றத்திற்கான அறிவியல்' என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் துணைத் தலைவராக சிவனார் தாங்கள் அரசு பள்ளி ஆசிரியர் ராமலிங்கம், திருக்கோவிலூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் அன்பழகன்,வட்டத் துணைச் செயலாளர்களாக ஆளூர் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வகுமார், பட்டிமன்ற பேச்சாளர் சிதம்பரநாதன், வட்ட பொருளாளராக பச்சையப்பன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களாக பாண்டியன், வானதி பிரியா ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். அறிவியல் இயக்க உறுப்பினர் ராகுல்திராவிட் நன்றி கூறினார்.

Tags

Next Story