தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் 

வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் அருகே நேற்று மாலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் மசூத் உஸ்மானி தலைமை தாங்கினார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மேலாண்மை குழு தலைவர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story