தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட பொதுக்குழு கூட்டம்

பெரம்பலூரில் நடந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டப் நிர்வாகப் பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பெரம்பலூர் மதரஸா சாலையில் உள்ள தவ்ஹீத் பள்ளியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டப் நிர்வாகப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் செய்யது அலி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ‌ மாவட்டத் தலைவர் அப்துல் நாசர் மாவட்டச் செயலாளர் பைசல் நிசார் மாவட்டப் பொருளாளர் சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலாளர் அல் அமீன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். பொதுகுழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மாவட்டத் தலைவராக அஷ்ரப் அலி மாவட்டச் செயலாளராக பைசல் நிசார் மாவட்டப் பொருளாளராக சிராஜ்தீன் மாவட்ட துணைதலைவராக ஜாஹிர் உசேன் மாவட்ட துணை செயலாளராக யாசிர் முஹம்மது, மாவட்ட மாணவரணிச் செயலாளராக முஹம்மது ஆரிப் மாவட்ட மருத்துவரணிச் செயலாளராக கலிஃபா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு கூட்டத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

மேலும் இதனையடுத்து கூட்டத்தில், நீண்டகால சிறைவாசிகளை விடுதலை செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அனைத்து முன்னெடுப்புகளையும் செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், பெரம்பலூர் சிட்கோ தொழிற்பேட்டையில் பெரம்பலூர் இளைஞர்களுக்கே அதிக வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும். மத வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பை நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும் உத்தரகாண்டில் இஸ்லாமியர்களின் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலைக் கண்டித்தும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை அடுத்து சிறப்பாக பணியாற்றிய குழுவினர்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிறப்பு நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் மாநில, மாவட்ட, நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story