தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்.

வழிபாட்டு தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி பெரம்பலூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
1991 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வழிப்பாட்டு தலங்கள் பாதுகாப்புச்சட்டம் , இந்திய நாடு சுதந்திரம் பெறும் போது எந்தெந்த வழிபாட்டுத்தலங்கள் எப்படி இருந்தனவோ அவை அப்படியே தொடர உத்தரவாதம் அளித்தது ஆனால் அதற்கு மாறான நடவடிக்கைகளில் ஆளும் மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது, ஜனநாயகமும் , சட்ட நெறிமுறைகளும் குழி தோண்டி புதைக்கப்படும் இக்கால கட்டத்தில் ஜனநாயக ரீதியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் அனைத்து மதங்களின் வழிபாட்டு தலங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைதிப் பேரணி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு , பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் அப்துல் நாசர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் பைசல் நிசார் முன்னிலையில் வகித்தார். மாநிலச் செயலாளர் பெரோஸ் கான் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார், மேலும் அனைத்து வழிபாட்டு தலங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட துணை செயலாளர் அஷ்ரப் அலி மாவட்ட, கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story