புதுக்கோட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்

கியான் வாபி பள்ளிவாசல் கீழ்தளத்தில் பூஜை செய்து கொள்ள சங்பரிவார் அமைப்பினருக்கு வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் புதுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில பேச்சாளர் அப்துல் ரகுமான் தலைமை வகித்தார் மாவட்ட பொருளாளர் ரபீக் ராஜா முன்னிலை வகித்தார் . இந்த ஆர்ப்பாட்டத்தில் கியான் வாபி பள்ளிவாசல் கீழ்தளத்தில் பூஜை செய்து கொள்ள சங் பரிவார் அமைப்புகளுக்கு வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது இந்த தீர்ப்பு இஸ்லாமியர் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது ஏற்கனவே பாபர் மசூதியும் இது போன்ற வழிமுறைகளை பயன்படுத்தி தான் இஸ்லாமிய தரப்பிலிருந்து பறித்தனர் .அடுத்து காசி மற்றும் மதுராவில் உள்ள பள்ளிவாசல் பறிப்பதற்கான நடவடிக்கைகளை அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும், சங்பரிவார் சங்கத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.

ஆகவே உச்ச நீதிமன்றம் இவர்களுக்கு வழங்கி உள்ள தீர்ப்பை ரத்து செய்ய வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் செய்தனர். இது குறித்து தவ்ஹீத் ஜமாத் மாநில பேச்சாளர் அப்துல் ரகுமான் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் 1991 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்புச் சட்டம் இந்திய சுதந்திரம் பெறும்பொழுது எந்தெந்த வழிபாடு தளங்கள் எப்படி இருந்தனவோ அவை அப்படியே தொடர உத்தரவாதம் அளித்தது. ஆனால் அதற்கு மாற்றமான நடவடிக்கைகளில் ஆளும் பாரதிய ஜனதா அரசு செயல்பட்டு வருகிறது. ஜனநாயகமும் சட்ட நெறிமுறைகளும் குழிதண்டி புதைக்கப்பட்டு இக்காலகட்டத்தில் ஜனநாயக ரீதியாக எங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்றும் வாரணாசி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து மீண்டும் அந்த இடத்தை எங்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவித்தார் இதில் ஆண்கள் பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

Tags

Next Story