திருப்பூரில் தமிழக வெற்றி கழகத்தின் திருப்பூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தமிழக வெற்றி கழகத்தின் திருப்பூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது.
தமிழக வெற்றி கழகத்தின் திருப்பூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. நடிகர் விஜய் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்தார். அதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகள் உடன் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தியுள்ளார். 2026 தேர்தலை மையமாக வைத்து அரசியல் பணிகளில் ஈடுபட போவதாகவும் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து திருப்பூர் வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமானது வடக்கு மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் திருப்பூர் கரட்டாங்காடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. 2026 தேர்தலை மையமாக வைத்து செயல்படுவது மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற செய்து நடிகரும் , தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய்யை முதல்வர் ஆக்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டிருந்தனர்.
Next Story