மலேசியாவில் பயிற்சி வழங்கிய தமிழக யோகா பயிற்சியாளர்கள்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த யோகா பயிற்சியாளர்களை மலேசியா கமிஷனர் அழைப்பின் பேரில் மலேசியாவில் நடந்த யோகா தின விழாவில் தமிழக யோகா பயிற்சியாளர்கள் பங்கேற்றனர். சர்வதேச யோகா தினத்தையொட்டி மலேசியா, கோலாலம்பூர் முருகன் கோவில் முன்பு யோகா தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் மலேசியா கமிஷனர் ரெட்டி தலைமை வகித்தார். இவரது அழைப்பின் பேரில்ஆயுஷ் தலைமையிலான இந்தியா யோகாசன விளையாட்டு கூட்டமைப்பின் தேசிய பொதுச்செயலர் அரவிந்தன், தேசிய துணை தலைவர் வினோத் ஆகியோர் பங்கேற்று, யோகா பயிற்சி வழங்கினார்கள்.
இதில் ஏராளமானோர் பங்கேற்று யோகா பயிற்சி பெற்றனர். இதில் அரவிந்த் குமாரபாளையத்தை சேர்த்தவர் என்பதும், வினோத் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. குமாரபாளையம் அரவிந்த், பல நாடுகளில் நடந்த யோகா போட்டிகளில் பங்கேற்று பல சாதனைகள் படைத்துள்ளார். மேலும் மாணவ, மாணவியர்களுக்கு யோகா பயிற்சிகள் வழங்கி, பல நாடுகளில் நடந்த யோகா போட்டிகளில் பங்கேற்க வைத்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட யோகா சாதனையாளர்களை உருவாக்கியுள்ளார்.