தமிழ் தேசிய பார்வேர்ட் பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் தேசிய பார்வேர்ட் பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் நிறுவனத் தலைவர் சங்கிலி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் வைகை அணையில் கழிவுநீர் கலப்பதை குப்பைகள் கொட்டுவதை கண்டித்து மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் செய்தனர். வைகை அணை 5 மாவட்டத்தில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சூழ்நிலையில் அந்த பகுதியில் தொடர்ந்து குப்பைகளையும் கழிவுகளையும் கொட்டும் கயவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மேலும் தனியாருக்கு மீன் பிடி உரிமையை வழங்கியதையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.பின்பு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Tags

Next Story