வெள்ளகோவில் பகுதி கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை

வெள்ளகோவில் பகுதி கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை

வெள்ளகோவில் பகுதிகளில் உள்ள திருக்கோவில்களில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.


வெள்ளகோவில் பகுதிகளில் உள்ள திருக்கோவில்களில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

வெள்ளகோவில் பகுதி கோவில் களில் தமிழ்ப்புத்தாண்டை முன் னிட்டு சிறப்பு வழிபாடுகள் நேற்று நடைபெற்றன. மேட்டுப்பாளையம் புஷ்பகிரி மலை வேலாயுதகந்த சாமி கோவிலில் முருகனுக்கு பால், தயிர், சந்தனம்,பன்னீர், இளநீர், விபூதி உள்பட பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதே போல வள்ளியரச்சல் ஈஸ்வரன் கோவில்,அழகு நாச்சியம்மன் கோவில், வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவில்,மாகாளியம்மன் கோவில்,வீரக்குமாரசாமி கோவில், எல்.கே.சி.நகர் புற்றிடம் கொண்டீஸ்வரர் கோவில், மயில்ரங்கம் ஆறுமுக பெருமான் கோவில், ஈஸ்வரன் கோவில்களிலும் தமிழ்ப்புத்தாண்டையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தாகள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட் டது.

Tags

Next Story