தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழா விழிப்புணர்வு பேரணி

தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழா விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி 

தர்மபுரியில் தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரவிழா விழிப்புணர்வு பேரணி நடந்தது.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரவிழா விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். தமிழ் ஆட்சிமொழி சட்டம் நிறைவேற்றப்பட்ட 27:12.1956 ஆம் நாளை நினைவு கூறும் வகையில் தர்மபுரி மாவட்டத்தில் 18.12.2023 முதல் இன்று வரை ஒருவார காலத்திற்கு ஆட்சிமொழி சட்ட வாரவிழா நடைபெற்றது.

தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரத்தினை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி இன்றைய தினம் நடைபெற்றது. பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி தர்மபுரி-சேலம் பிரதான சாலை வழியாக அரசு கலைக் கல்லூரி தர்மபுரி வரை சென்று முடிவடைந்தது. பேரணியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள், தமிழ் மொழியின் அவசியம் குறித்தும் , சிறப்புகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி, தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தமிழ் வளர்ச்சித்துறை அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story