கன்னியாகுமரியில் தமிழ் பரப்புரை ரத யாத்திரை 

கன்னியாகுமரியில் தமிழ் பரப்புரை ரத யாத்திரை 

கன்னியாகுமரியில் தமிழ் பரப்புரை ரத யாத்திரை இன்று துவங்கியது.

கன்னியாகுமரியில் தமிழ் பரப்புரை ரத யாத்திரை இன்று துவங்கியது.

பன்னாட்டு தமிழுறவு மன்றமும் அனைத்து தமிழ் இயக்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து தமிழ்நாட்டில் தமிழுக்கு முதன்மை வேண்டி கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை தமிழ் அறிஞர்களின் பரப்புரை ரத யாத்திரையின் தொடக்க விழா கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு இன்று நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு பன்னாட்டு தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் கவிஞர் சேதுராமன் தலைமை தாங்கினார். இந்த தமிழ் பரப்புரை ரத யாத்திரையை குமரி மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகி இளங்கோ தொடங்கி வைத்தார். இந்தநிகழ்ச்சியில் குமரி மாவட்ட வரலாற்று பண்பாட்டு ஆய்வு மைய நிர்வாகி டாக்டர் நாகேந்திரன், திருவள்ளுவர் அறக்கட்டளை நிர்வாகி தாகூர், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலர் தாமஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். கன்னியாகுமரியி லிருந்து புறப்பட்ட இந்த தமிழ் பரப்புரை ரத யாத்திரை தூத்துக்குடி ராஜபாளையம், மதுரை கரூர், திருச்சி, தஞ்சை மயிலாடுதுறை, வடலூர் புதுச்சேரி, திண்டிவனம் செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக வருகிற 22-ம் தேதி சென்னை சென்றடைகிறது.

Tags

Read MoreRead Less
Next Story