உதவி செயற்பொறியாளரை பணிநீக்கம் செய்ய தமிழ்ப்புலிகள் கட்சி கோரிக்கை
மனு அளிக்க வந்த தமிழ்ப்புலிகள் கட்சியினர்
தமிழ் புலிகள் கட்சியினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பராமரிப்பு உட்கோட்டம் இரண்டு உதவி செயற்பொறியாளதமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஊழியர்களாக பணி செய்து வருகின்ற கதிரேசன் மற்றும் சிலம்பரசன் ஆகிய இருவரையும் பட்டியல் இனத்தைச் சார்ந்தவர் என்கின்ற ஒரே காரணத்திற்காக நீங்கள் எல்லாம் என்னை கேள்வி கேட்பதா...! என்று சொல்லி சாதிய மனநிலையில், சாதிய சிந்தனையில் இரவு பகல் பாராமல் பொதுமக்களுடைய அடிப்படை தேவையான நீர் ஆதாரத்தை கொண்டு செல்லக்கூடிய பணி செய்து வந்த நபர்களை எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி வேலையிலிருந்து நிறுத்தி உள்ளார்.
இதனால் மிகப்பெரிய அளவிற்கு அவருடைய குடும்ப சூழ்நிலை கேள்விக்குறியாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் நாமக்கல் பராமரிப்பு உட்கோட்டம் இரண்டு உதவி செயற்பொறியாளர் என்பவர் அவரது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வேலை செய்து வரக்கூடிய ஊழியர்களுக்கு முழுமையான ஊதியம் கொடுக்காமலும் ஜம்புகளில் இருக்கக்கூடிய முற்புதர்களை அகற்றவும், சுத்தம் செய்யவும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியிலிருந்து அகற்றாமல் கிராமப்புற பஞ்சாயத்தில் 100 நாள் திட்டத்தின் மூலமாக அகற்றிவிட்டு தான் அகற்றியதாக பொய் கணக்கு காட்டுவதாகவும் கூறப்படுகிறது, ஜம்புக்களை சுத்தம் செய்து பராமரிக்க வேண்டிய நீர் தொட்டிகளை விதிமுறைகளுக்கு உட்பட்டு சுத்தம் செய்யாமல் மெத்தனப்போக்கோடு செயல்பட்டு வருகிறார்.
இவர்கள் இருவர் மட்டுமல்ல சேந்தமங்கலம் பகுதியைச் சார்ந்த அதே அருந்ததியர் சமுதாயத்தைச் சார்ந்த நபரையும் எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி வேலையில் இருந்து நிறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியான சூழ்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் , தமிழ்நாடு அரசிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் உள்நோக்கத்தோடு குறிப்பாக குறி வைத்து பட்டியலின மக்கள் மீது பாகுபாட்டினை காட்டக்கூடிய அரசு ஊழியரான நாமக்கல் உட்கோட்டம் இரண்டு பராமரிப்பு உதவி செயற்பொறியாளர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவரை பணிநீக்கம் செய்ய வேண்டி தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பாக சேலம் மேற்பார்வை செயற்பொறியாளர் அனுப்பிய சம்மனை ( அழைப்பானை ) ஏற்று விசாரணைக்கு ஆஜராகிய உதவி செயற்பொறியாளர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுத்து பணிநீக்கம் வேண்டும் என்கின்ற கோரிக்கையை வலியுறுத்தி பிறகு தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை கொடுத்துள்ளனர்.