தமிழறிஞர் வ.ஐ.சுப்பிரமணியம் பிறந்த நாள் விழா

தமிழறிஞர் வ.ஐ.சுப்பிரமணியம் பிறந்த நாள் விழா

தமிழறிஞர் வ.ஐ.சுப்பிரமணியம் பிறந்த நாள் விழா

தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், முதல் துணை வேந்தர் முனைவர் வ.ஐ.சுப்பிரமணியம் 98ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், ஞாயிற்றுக்கிழமையன்று, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் முனைவர் வ.ஐ.சுப்பிரமணியம் 98ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளுவன் தலைமையில், துணைவேந்தர் இல்லம் அருகில் அமைந்துள்ள அன்னாரின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் துணைவேந்தர் புகழஞ்சலி உரையாற்றுகையில், முனைவர் வ.ஐ.சுப்பிரமணியம் தமிழுக்கும், தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கும் ஆற்றிய தொண்டுகள், மொழியியல் துறை மற்றும் பிற துறைகள் உருவாக்கம் பற்றியும், தமிழ் இருக்கும் வரை அன்னாரின் பெருமையும் போற்றப்படும்" என்று கூறினார்.

இந்நிகழ்வில், பதிவாளர் (பொ) முனைவர் பெ.இளையாப்பிள்ளை, முன்னாள் மொழியியல் துறைப் பேராசிரியர் முனைவர் நடராசப்பிள்ளை, மக்கள் தொடர்பு அலுவலர் முனைவர் இரா.சு.முருகன், மொழியியல்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் மா.ரமேஷ்குமார், பொறியியல் பிரிவின் சார்பாக க.சுவாமிநாதன், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், புலத்தலைவர்கள், கல்வியாளர்கள், அலுவல்நிலைப் பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Tags

Next Story