அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி
அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி
விழுப்புரம் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளிடையே தமிழ் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில்மாணவ, மாணவிகளிடையே தமிழ் ஆர்வத்தை ஏற்படுத்தவும் தமிழ் இலக்கண, இலக்கிய வரலாற்றை அறிந்துகொள்ளும் வகையிலும் ஒவ்வொரு பள்ளியிலும் தமிழ்க்கூடல் நிகழ்ச்சியை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்த் துறை சார்பில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் சசிகலா வரவேற்றார். வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கலந்துகொண்டு, விழுப்புரம் மாவட்டத்தின் தொன்மைச் சிறப்புகள், தமிழின் வரலாறு, தமிழ் இலக்கியங்களை மாணவிகள் வாசிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கி பேசினார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் வளர்மதி வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேச்சுபோட்டி, கட்டுரை, கவிதைப்போட்டிகள் நடத்தப்பட்டு அதில் ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களை பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை முதுகலை ஆசிரியர் தமிழரசி தொகுத்து வழங்கினார். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் மாலாராணி நன்றி கூறினார்.
Next Story