இரத்த தான முகாமை தமிழ் மகன் உசேன் தொடங்கினார்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்த நாள் நினைவாக இரத்த தான முகாம், மற்றும் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தொடங்கி வைத்தார்.
சென்னை மேற்கு மாம்பாலம் பகுதியில் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்த நாள் நினைவாக இரத்த தான முகாம், மற்றும் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. எம் ஜி ஆர் இளைஞர் அணி செயளாலர் சுனில் தலைமையில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வக்பு வாரிய முன்னாள் தலைவரும், அதிமுக அவைத் தலைவருமான தமிழ் மகன் உசேன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் இரத்ததான முகாமையும் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் சுனில் மற்றவர்களுடன் இணைந்து அவரும் இரத்த தானம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் பேசும் போது, அதிமுக தலைமை யாரை வேட்பாளர்களாக தேர்வு செய்தாலும் அவர்கள் வெற்றி பெற இணைந்து உழைக்க வேண்டும் என்று அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்தார்.

Tags

Next Story