தமிழ் பல்கலைக்கழகத்தில்  முதுகலைப் பட்டப்படிப்புக்கு கலந்தாய்வு 

தமிழ் பல்கலைக்கழகத்தில்   முதுகலைப் பட்டப்படிப்புக்கு கலந்தாய்வு 

கலந்தாய்வு 

தமிழ் பல்கலைக்கழகத்தில்  முதுகலைப் பட்டப்படிப்பு மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்றது.

தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத்துறையில் நடத்தப்படும் முதுகலைப் பட்டப் படிப்பிற்கான 2024-2025ஆம் கல்வி ஆண்டுக்கான முதற்கட்ட கலந்தாய்வு கூட்டம் புதன்கிழமை, தமிழ்ப் பல்கலைக்கழகப் பேரவைக்கூடத்தில் நடைபெற்றது.

நிகழ்விற்கு, துணைவேந்தர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்தார். பதிவாளர் சி.தியாகராஜன் வாழ்த்திப் பேசினார். கலைப்புல முதன்மையரும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரும் இலக்கியத்துறை பேராசிரியருமான பெ.இளையாப்பிள்ளை வரவேற்றார். இலக்கியத்துறை உதவிப்பேராசிரியர் இரா.தனலெட்சுமி நன்றி கூறினார்.

இந்நிகழ்வில், மொழிப்புல முதன்மையர் ச.கவிதா, நாட்டுப்புறவியல் துறை உதவிப்பேராசிரியர் சீ.இளையராஜா, மொழியியல்துறை உதவிப்பேராசிரியர் ம.ரமேஷ்குமார், சேர்க்கைப்பிரிவு கண்காணிப்பாளர் தே.ரேவதி, சேர்க்கைப் பிரிவைச் சார்ந்த அலுவல்நிலைப் பணியாளர்கள்,

மாணவர்களின் பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் கலந்து கொண்டனர். இன்னும் இரண்டு கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.

Tags

Next Story