மறைந்த முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உடலுக்கு தமிழச்சி தங்க பாண்டியன் நேரில்அஞ்சலி

மறைந்த முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உடலுக்கு தமிழச்சி தங்க பாண்டியன் நேரில்அஞ்சலி

அஞ்சலி 

மறைந்த முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உடலுக்கு தமிழச்சி தங்க பாண்டியன் நேரில்அஞ்சலி

திமுக இலக்கிய அணி தலைவரும் முன்னாள் அச்சருமான இந்திர குமாரி உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.73 வயதான இவர்சிறுநீரக பாதிப்புகாரணமாகசென்னைஅப்போலோமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். மறைந்த முன்னாள் அமைச்சர் இந்திரா குமாரி உடலுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் நேரில் சென்று மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.இவரின் கணவர் வழக்கறிஞராவார். இவருக்கு லேகா என்ற ஒரு மகள் உள்ளார். 1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இந்திர குமாரி இடம்பிடித்திருந்தார். தொட்டில் குழந்தை திட்டம் உருவாக முக்கிய காரணமாகவும் இவர் திகழ்ந்தார்.

தமிழ் மீது தீராத பற்று கொண்டிருந்த இந்திரகுமாரி 2006-ல் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். அவருக்கு இலக்கிய அணி மாநிலத் தலைவர் பதவியை வழங்கியது.உடல்நலக்குறைவால் காலமான இந்திரகுமாரியின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின்,அமைச்சர்கள் சேகர்பாபு ,மா. சுப்பிரமணியம், தயாநிதிமாறன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். இவரது உடல் அஞ்சலிக்காக சென்னை அடையாறு காந்தி நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துவருகிறார்கள். இதற்கிடையே சென்னை அடையாறு காந்திநகரில் வைக்கப்பட்டுள்ள புலவர் இந்திர குமாரியின் உடலுக்கு திமுக மற்றும் பிற கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.இந்திர குமரியின் இறுதி அஞ்சலி இன்று மாலை 4.30 மணியளவில் பெசன்ட் நகர் இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

உடல்நலக்குறைவால் காலமான இந்திரகுமாரிக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன் இரங்கல் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்,திமுக இலக்கிய அணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான இந்திர குமாரி உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.இந்த செய்தி தம்மை சோகத்தில் ஆழ்த்தியதாகவும் ,அவரை இழந்து வாடும், அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்து கொள்வதாக பதிவிட்டுள்ளார் .

Tags

Next Story