மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் விழா துவங்கியது

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் விழா துவங்கியது

கோவில் விழாவில் தமிழிசை பங்கேற்பு 

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் விழாவில் தமிழிசை பங்கேற்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உள்ளது. கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால், இந்த கோவில் பெண்களின் சபரிமலை என அழைக்கப்படுவது வழக்கம். இங்கு மாசி பெருந்திருவிழா இன்று 3-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெற உள்ளது. காலை நடந்த கொடியேற்று நிகழ்ச்சியில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வதனம், விஜய் வசந்த் எம்.பி, நாகர்கோவில் மேயர் மகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story