டாஸ்மாக் கடைகளை மூடுவதாக கூறி வளமாக நடத்தி வரும் திமுக - ஜி.கே.வாசன்

டாஸ்மாக் கடைகளை மூடுவதாக கூறி வளமாக நடத்தி வரும் திமுக - ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன் பிரசாரம் 

திமுக டாஸ்மாக் கடைகளை மூடுவதாக கூறிவிட்டு அதை வளமாக நடத்தி கொண்டு இருப்பதாகவும் , தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கவலைக்கிடமாக உள்ளதாகவும் , கொலை , கொள்ளை அதிகரித்துள்ளதாகவும் மொடக்குறிச்சியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜி.கே.வாசன் பேசினார்.

ஈரோடு் நாடாளுமன்ற தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜயகுமாரை ஆதரித்து சைக்கிள் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மொடக்குறிச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தில் பேசிய ஜி.கே.வாசன் , இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல் என்றும் பொருளாதார வளர்ச்சி பெற வேண்டும், மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் மோடி 3 வது முறையாக பிரதமராக பதவி ஏற்க வேண்டும் என்றார் வளமான தமிழகம் , வலிமையான பாரதம் பெற அடிப்படையான தேர்தல் இது என்ற ஜி.கே.வாசன் , மத்திய அரசின் 10 ஆண்டுகால சாதனை தான் நமது வெற்றியின் அடித்தளம் என்றும் பிரதமர் மோடி தமிழ் மீதும் , தமிழர்கள் மீதும் பற்றும் , கலாச்சாரத்தின் மீது மதிப்பு , திறக்குறள் மீது வெளிநாடுகளுக்கு சென்றாலும் மதிப்பு வைத்துள்ளார் என்றார்.

திமுக டாஸ்மாக் கடைகளை மூடும் என கூறிவிட்டு அதை வளமாக நடத்தி கொண்டு இருப்பதாகவும் , தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கவலைக்கிடமாக உள்ளதாகவும் , கொலை , கொள்ளை அதிகரித்துள்ளதாகவும் இதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்க தேசிய ஜனநாயக கூட்டணியினருக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story