தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்பது தான் இலக்கு - செல்வப்பெருந்தகை

தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்பது தான் இலக்கு - செல்வப்பெருந்தகை

Congress leader selvaperunthagai

வேலூரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை பேட்டி அளித்தார்.

வேலூரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், "காங்கிரஸ் கட்சி 57 ஆண்டு காலம் ஆட்சி இழந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தி, காமராஜர் ஆட்சி அமைப்பதற்கு மக்களோடு, மக்களாக காங்கிரஸ் கட்சியின் கொள்கை, கோட்பாடு காங்கிரஸ் கட்சி என்னென்ன சட்டங்கள் திட்டங்கள் கொண்டு வந்துள்ளது என்பதை மக்களிடம் சென்று சேர்க்க உள்ளோம்.

நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயக்குமார் மரணம் என்பது கிடைத்துள்ள தகவல்களைப் பார்க்கும்போது அது கொலைதான். தற்போது இதுகுறித்து புலன் விசாரணை நடந்து கொண்டிருப்பதால் அதில் நாம் தலையிடக் கூடாது. எங்களைப் பொறுத்தவரை அது தற்கொலை இல்லை. 9 நாட்கள் ஆகிவிட்டது. முழுமையான உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பிறகு காவல்துறையினர் தெரிவிப்பார்கள். விசாரணை முடிந்த பிறகு இது தொடர்பாக பதிலளிக்கிறேன். இந்தியா முழுவதும் ஒரு சதவீதம் கூட காங்கிரஸ் கட்சி வளர்ச்சி இல்லையென ஏமாற்றுக்காரர்கள் தான் அப்படி கூறுவார்கள். நாடு விடுதலை அடைந்த போது ஒரு குண்டூசி கூட தயாரிக்க கூடிய அளவில் இந்தியா இல்லை.

ஜவஹர்லால் நேரு வந்த பிறகு நாட்டில் மிகப்பெரிய கட்டமைப்பை ஏற்படுத்தினார். ஆனால் பா.ஜனதா கடந்த 10 ஆண்டுகளில் என்ன செய்தது?. உண்மைக்கு புறம்பாக பேசுவது தான் பா.ஜனதாவின் வேலை. தமிழர்களை தீவிரவாதிகள் என கர்நாடக எம்.பி. கூறியிருக்கிறாரே அதற்கு அண்ணாமலை ஒரு கண்டனமாவது தெரிவித்தாரா?. ஆர்.எஸ்.எஸ். கைக்கூலி தான் அண்ணாமலை" என கூறினார்.

Tags

Next Story