மீனவர் குடும்பத்துக்கு எம்எல்ஏ ஆறுதல் 

மீனவர் குடும்பத்துக்கு எம்எல்ஏ ஆறுதல் 

தமிழக.மீனவர்கள்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் ஆறுதல் தெரிவித்தார்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள சேதுபாவாசத்திரம் பகுதியை சேர்ந்த முனீஸ்வரன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் மீனவர்கள் கழுமங்குடா வாஞ்சிநாதன் (22), சேதுபாவாசத்திரம் மகேஷ் (30), ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ரஞ்சித் (32) ஆகிய மூன்று மீனவர்கள்கடந்த 15ஆம் தேதி மீன் பிடிக்க சென்றனர். அப்போது மழையால் நாட்டுப்படகு திசை மாறி இலங்கை கடல் பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து இலங்கை கடற்படையினர் மூன்று மீனவர்களை கைது செய்து படகையும் பறிமுதல் செய்தனர். யாழ்ப்பாணம் மாவட்டம் இளவாழை காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் மூவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் திங்கட்கிழமையன்று, இலங்கை கடற்பறையினரால் கைது செய்யப்பட்டுள்ள, சேதுபாவாசத்திரம் மீனவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மூன்று மீனவர்கள் மற்றும் படகை பத்திரமாக மீட்க, தமிழக மீன்வளத்துறை அமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அப்போது, தமிழ்நாடு மீனவர் நலவாரிய துணைத் தலைவர் மல்லிப்பட்டினம் தாஜுதீன் மற்றும் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் சாகுல்ஹமீது நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story