தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


தென்காசியில் தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்காசியில் தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க தென்காசி மாவட்ட தலைவர் காளிராஜ், தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஸ்டெல்லா தேவி, மாநிலத் துணைத் தலைவர் கலைச் செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சுயம்புலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் முத்துக்குமார் வரவேற்று பேசினார்.

சிபிஎஸ் ரத்து, இஎல். ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் பழைய முறையில் நடைமுறைப் படுத்த வேண்டும். 2009க்குப் பின்பு பணியேற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய பேரிழப்பான ஊதிய முரண்பாட்டைச் சரி செய்திட வேண்டும். புதிய ஊதியக் குழுவில் முதுகலை ஆசிரியருக்கு ஊதிய விகிதத் தில் உரிய அங்கீகாரத்தை வழங்கிட வேண்டும். மேல்நிலைப் பள்ளித் தலைமை யாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்தி விட்டு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்திடுவதை ஆண்டுதோறும் உறுதி செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் திரளான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் திருமாறன் நன்றி கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story