தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நாமக்கல் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி நாமக்கல் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு இன்று செவ்வாய்க்கிழமை (மே -14) மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாவட்டத்துணைச் செயலாளர் வெ.வடிவேல் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டச் செயலாளர் மெ.சங்கர் ஆர்ப்பாட்டத்தினை தொடங்கி வைத்து தொடக்க உரை ஆற்றினார். மாநிலப்பொருளாளர் முருகசெல்வராசன் கோரிக்கை ஆர்ப்பாட்ட பேருரை ஆற்றினார்.

மாநில பணி மூப்பு அரசாணை எண்: 243 /நாள்: 21.12.2023 -ஐ முற்றிலுமாக இரத்து செய்க, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒன்றிய -நகராட்சி பணி மூப்பின் படி நடுநிலைப்பள்ளி / தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுகள் வழங்கிடுக,பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சியை கைவிடுக,மாநில அளவிலான இடைநிலை ஆசிரியர் உபரி பணியிட நிரவல் கலந்தாய்வை கைவிடுக, பணியாற்றும் தொகுதியில் ஆசிரியர்களை வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமனம் செய்திடுக,என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.கூட்ட நிறைவில் மாவட்டப் பொருளாளர் சு.பிரபு நன்றி கூறினார்.

Tags

Next Story