மக்களவை தேர்தல் - பல்வேறு குழுக்களுக்கு பயிற்சி வகுப்பு
ஆலோசனை கூட்டம்
தஞ்சாவூரில் மக்களவை தேர்தலையொட்டி பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு, வீடியோ கண்காணிப்புக் குழு, செலவு கணக்குக் குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாகவும், தேர்தல் செலவின கணக்குகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மற்றும் பயிற்சி தஞ்சாவூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. இப்பயிற்சியில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு, வீடியோ கண்காணிப்புக் குழு, செலவு கணக்குக் குழு போன்ற அனைத்து குழுக்களுக்கு, தேசிய அளவிலான சிறப்பு பயிற்சியாளரும், தஞ்சாவூர் தேர்தல் வட்டாட்சியர் மற்றும் கலால் மேற்பார்வை அலுவலர் கி.கஜேந்திரன் பயிற்சி வழங்கினார். இப்பயிற்சியில், பல்வேறு குழுக்களை சேர்ந்த 132 நபர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தையல்நாயகி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story