தஞ்சை ஸ்ரீ கணேசா வித்யாசாலா பள்ளியின் 50 ஆம் ஆண்டு முப்பெரும் விழா

நல்லொழுக்கத்தில் சிறந்த மாணவர்களை கவுரவித்த பள்ளி

தஞ்சாவூர் பூக்காரத் தெருவில் உள்ள ஸ்ரீகணேசா வித்யாசாலா நடுநிலைப்பள்ளியின் 50 ஆம் ஆண்டு முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற்றது.

திருவள்ளுவர் விழா, பள்ளியின் 128 ம் ஆண்டு விழா, பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா பள்ளி வளாகத்தில் உள்ள முன்னாள் ஆட்சிக்குழுத் தலைவர் சிவ.பாலசுப்பிரமணியன், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் சி.நா.மீ.உபயதுல்லா ஆகியோரின் நினைவரங்கத்தில் நடைபெற்றது. ஓய்வு பெற்ற பேராசிரியர் டி.காத்தையன் தலைமை வகித்தார். பள்ளி செயலாளர் கோ.ரவிகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார். பள்ளி தலைமையாசிரியரும், நல்லாசிரியர் விருது பெற்றவருமான பா.அல்லிராணி அறிக்கை வாசித்தார்.

பள்ளியில் நடந்த திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மா.கோபாலகிருட்டிணன் பரிசுகள் வழங்கி பாராட்டினார். கல்வியின் முதன்மை பெற்ற மாணவர்களுக்கு, மருத்துவர் டி.கிருஷ்ணமூர்த்தி நல்லொழுக்கத்தில் சிறந்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு தஞ்சாவூர் மாநகர நல அலுவலர் மருத்துவர் வீ.சி.சுபாஷ்காந்தி; பாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வட்டாரக்கல்வி அலுவலர் சீ.அப்பிகா, திருமுறை ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, பெரியகோவில் வார வழிபாட்டு மன்ற தலைவர் சோம.ஆறுமுகம், திருவருட்பா ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பா.தியாகராஜன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

இதை தொடர்ந்து, தமிழகத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக சிறந்த சுகாதார மையம் என தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பூக்காரத் தெரு கல்லுக்குளம் ஆரம்ப சுகாதார மையத்தின் தலைமை மருத்துவர் ஏ.எஸ்.முத்துக்குமார் மற்றும் சென்னை நண்பர்கள் கல்வி அறக்கட்டளை தலைவர் தினேஷ் சந்திரசேகரன் ஆகியோரை, தஞ்சை மருத்துவக்கல்லுாரி முடநீக்கியல்துறை உதவி பேராசிரியர் மருத்துவர் குமாரவேல் பாராட்டி, வாழ்த்துரை வழங்கினார்.

1330 திருக்குறள் ஒப்பித்து திருக்குறள் திலகம் விருது பெற்ற 2ம் வகுப்பு மாணவி சிவ.தேவதர்ஷினி, 3ம் வகுப்பு மாணவர் சிவ.சாய் செல்வா ஆகியோரையும், அவர்களது பெற்றோர் செ.சிவச்சந்திரன், சி.சிவரஞ்சனி ஆகியோரையும், தமிழ்ப்பல்கலைக்கழக தொல்காப்பியர் இருக்கை பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியன் பாராட்டி, வாழ்த்துரை வழங்கினார். பள்ளி ஆட்சிக்குழு தலைவர் பால.விருத்தாம்பாள் நன்றியுரை வழங்கினார்.

Tags

Next Story