டேங்கர் லாாி டிரைவர், கிளீனர்கள் திடீர் போராட்டம்

டேங்கர் லாாி டிரைவர், கிளீனர்கள் திடீர் போராட்டம்


திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டையில் டேங்கர் லாாி டிரைவர், கிளீனர்கள் திடீர் போராட்டம் செய்தனர்.


திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டையில் டேங்கர் லாாி டிரைவர், கிளீனர்கள் திடீர் போராட்டம் செய்தனர்.

திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கிடங்கு இயங்கி வருகிறது சென்னையில் இருந்து குழாய் வழியாக பெட்ரோல், டீசல் கொண்டு வந்து இங்கு சேமிக்கப்பட்டு திருச்சி ,தஞ்சை ,புதுக்கோட்டை மயிலாடுதுறை ,காரைக்கால் வரை டேங்கர் லாரி வழியாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அண்மையில் மத்திய அரசு கிரிமினல் சட்ட திருத்தம் கொண்டு வந்தது அதில் டிரைவர்கள் விபத்து ஏற்படுத்தினால் பத்து வருட சிறை தண்டனையும் ரூபாய் 7 லட்சம் அபராதமும் விதிக்க திருத்தம் செய்யப்பட்டது சட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதனை கண்டித்து வட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் டிரைவர் சங்கத்தினர் போராட்டத்தில் குதித்தனர் , அதனால் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

தற்பொழுதும் அந்த சட்டம் நடைமுறையில் இருக்கிறது என்று டிரைவர்களுக்கு தெரிய வரவே தற்பொழுது இதனை கண்டித்து வாழவந்தான் கோட்டை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முன் திருச்சி பெட்ரோலியம் டேங்கர் ட்ரக் ஓட்டுனர் ,நலச் சங்கத்தின் சார்பில் புதிய சட்ட திருத்தத்தை உடனடியாக மத்திய அரசு ரத்து செய்து வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள போராட்டமாக இன்று காலை சங்கத்தின் திருச்சி டெர்மினல் தலைவர் அழகர் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

போராட்டத்திற்கு சங்கத்தின் நிர்வாகிகள் ஜீவா, ரவி பிரசாத், சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் 200க்கும் மேற்பட்ட டிரைவர்கள், கிளீனர்கள் இதில் கலந்துகொண்டு தங்களது ஆதரவை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் போராட்டம் மாலை ஐந்து முப்பது மணி வரை நடைபெறும். இவர்களது திடீர் போராட்டத்தால் திருச்சி ,புதுகை, தஞ்சாவூர் ,கும்பகோணம், திருத்துறைப்பூண்டி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு பெட்ரோல் ,டீசல் விநியோகம் இன்று முழுவதும் இருக்காது .

Tags

Next Story