ஆம்பூர் அருகே தோல்தொழிற்சாலை கழிவுநீர்: விவசாயிகள் வேதனை

ஆம்பூர் அருகே தோல்தொழிற்சாலை  கழிவுநீர்: விவசாயிகள் வேதனை

நுரை பொங்கி வரும் கழிவுநீர்

ஆம்பூர் அருகே மழைக்காலங்களில் தொடர்ந்து தோல் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் திறந்து விடுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றது தேக்கிவைக்கப்பட்திருந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர்களை மழைகாலங்களில் பாலாற்றில் கலந்து விடுகின்றனர்.

இந்நிலையில் ஆம்பூர் சோமலாபுரம் பகுதியில் பாலாற்றில் செல்லும் நீரில் தோல் தொழிற்சாலைகளில் இருந்து திறந்து விடப்பட்ட கழிவு நீரால் வெள்ளை நிறத்தில் நுரை பொங்கி ஓடும் பாலாறுகா மாறி வருகின்றது.

மழைக்காலங்களில் தொடர்ந்து தோல் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் திறந்து விடுவதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்து வருகின்றனர் இதை குறித்து துறை சேர்ந்த அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்

Tags

Next Story