காளையார்கோவிலில் தபசு வைபவம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

காளையார்கோவிலில் தபசு வைபவம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

காளையார்கோவிலில் தபசு வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது -


காளையார்கோவிலில் தபசு வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள புராண சிறப்பு மிக்க அருள்மிகு ஸ்ரீ சௌந்தரவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ சோமேஸ்வரர் திருக்கோவிலில் வைகாசிவிசாக பெருவிழாவை முன்னிட்டு தபசு வைபவம் வெகு விமர்சியாக நடைபெற்றது. இவ்விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. ஐந்தாம் திருநாளில் தபசு வைபவம் கோவில் முன்பு நடைபெற்றது. முன்னதாக கொடிமரம் முன்பு உற்சவ தெய்வங்கள் ஸ்ரீ சோமேஸ்வர ஸ்வாமி பிரியாவிடை அம்மனுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருினார்கள்.

தொடர்ந்து தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று சொடச உபச்சாரங்களும் பல்வேறு தீப ஆராதனைகளும் காண்பிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து சுவாமியை ராஜகோபுரம் முன்பு ரிஷப வாகனத்தில் எழுந்தருள செய்தனர். சௌந்தரவல்லி அம்மனை தவக்கோளத்தில் எழுந்தருளினார்கள். தொடர்ந்து தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று சுவாமியை சௌந்தரவல்லி அம்பாள் மூன்று முறை சுற்றி வலம் வந்தார். நிறைவாக தபசு வைபவம் நடைபெற்று கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆடி தபசு வைபவத்தை கண்டு வழிபட்டனர்.

Tags

Next Story