தற்காலிகமாக மூடப்பட்ட தார் கலவை ஆலை
தேவாலாப் பகுதியில் இயங்கி வரும் தார் கலவை ஆலை தற்காலிகமாக மூடப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள தேவாலாப் பகுதியில் இயங்கி வரும் தார் கலவை ஆலையிலிருந்து வெளியேறும் புகையினால் பொது மக்களுக்கு பல்வேறு நோய் உபாதைகள் ஏற்படுவதாக கூறி கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்
. இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் தார் கலவை ஆலை திறக்கப்பட்டது . இதனால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். ஆலையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டங்கள் தொடரும் எனக் கூறிய கிராம மக்கள் கடந்த நான்கு நாட்களாக சாலையில் அமர்ந்து போராட்டம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து சட்ட ஒழுங்கு பிரச்சனை மற்றும் மக்கள் போராட்டம் நடத்தி வந்ததால் வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் தார் கலவை ஆலையை தற்காலிகமாக மூட நோட்டீஸ் ஒட்டினர் இதையடுத்து நான்கு நாட்கள் மக்கள் நடத்தி வந்த போராட்டம் அப்புறம் கைவிடப்பட்டது.