கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் தார் சாலை அமைக்கும் பணி - துணை சபாநாயகர் பார்வையிட்டு ஆய்வு

கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் தார் சாலை அமைக்கும் பணி - துணை சபாநாயகர் பார்வையிட்டு ஆய்வு

துணை சபாநாயகர் பார்வையிட்டு ஆய்வு

கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் தார் சாலை அமைக்கப்பட்டு வரும் பணிகளை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் அடங்கிய கீழ்பென்னாத்தூர்- ராஜாதோப்பு வரை 1 கி.மீ செல்லும் தார் சாலை பணிகள் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ 1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்குமாறும் அறிவுறுத்தினார். ஆய்வின்போது. பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன்,நகர தி.மு.க செயலாளர் அன்பு,பேரூராட்சி தலைவர் சரவணன்,உதவி பொறியாளர் சிவபாத சேகர் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story