35 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு

X
மராகன்றுகள் நடல்
35 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் : காற்று மாசுபடுவதை தடுத்து,பூமி வெப்பமயமாதலை குறைக்க ஒட்டன்சத்திரத்தில் இந்தாண்டு 35 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.ஒட்டன்சத்திரம் நகரானது மேற்கு மலை தொடர்ச்சியின் அடிவாரத்தில் இருந்தபோதிலும் ஒரு சில ஆண்டுகள் தவிர்த்து மற்ற ஆண்டுகளில் பருவ மழை சரிவர பெய்யாமல் பொய்த்து போவது உண்டு. ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள ஊராட்சிகள்,நகராட்சி பகுதிகள் அரசு நிலங்கள், ரோட்டுப் பகுதிகள் காலியிடங்களை கண்டறிந்து அவற்றில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் பணி இடைவிடாமல் செய்யப்படுகிறது.
மேலும் மரக்கன்றுகள் விலங்குகளால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு மரக்கன்றுகளை சுற்றி பச்சை துணி வேலி அமைத்து பாதுகாக்கப்படுகிறது.
Tags
Next Story
